எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தனது கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று காலை பணியை ஆரம்பித்த போதிலும் அவரது பணிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு ஸ்ரீமத் மாகஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் அவர் பணியை ஆரம்பித்துள்ளார்.
பணியை ஆரம்பித்த பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை எடுத்து கொண்டு வெளியேறியுள்ளார்.
எப்படியிருப்பினும் இதுவரையில் எதிர்க்கட்சி தலைவர் செயலாளர் நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இதன் காரணமாக தொடர்ந்து மஹிந்த ராஜபக்சவின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனை சம்பந்தரின் சூழ்ச்சி என மகிந்த தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment