சிறுமி ஒருவரைக் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில், காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞனை மடக்கிப் பிடித்த மக்கள் முறையான கவனிப்பின் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த நபர் மருத்துவமனையில் பொலிஸ் பாதுகாப்பிலிருந்த போது தப்பிச் சென்றுள்ளார். பொலிஸார் வேண்டுமென்றே அவரைத் தப்பிக்க விட்டனர் என்று நாவாந்துறை மக்கள் குற்றம் சுமத்தினர்.
எமது பகுதியில் கடந்த 23ஆம் திகதி 12 வயதுச் சிறுமியை உந்துருளியில் வந்த இளைஞன் கடத்திச் செல்ல முற்பட்டான். இருப்பினும் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள்.
கடத்த முற்பட்ட இளைஞன் தப்பிச் சென்றுவிட்டான். உந்துருளி இலகத்தைக் குறித்து வைத்துக் கொண்டோம். இன்றும் (நேற்று) அதே உந்துருளியில் இளைஞன் ஒருவன் உலாவுவதை அவதானித்தோம்.
சந்தைப் பகுதியில் அவரை மடக்கிப் பிடித்தோம் என்று நாவாந்துறைப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment