தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைப்பதாக மேல்நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் கட்சி ஆதரவா ளர்கள் நீதிமன்ற வளாகத்தில் பெருமளவு குழுமியிருந்த போதிலும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தம்மை அச்சுறுத்தி வாக்குமூலம் பெற்றதாகக் கூறி குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்த வழக்கு விசாரணைகளின் போது நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டி ருந்தபோது தேவாலயத்திற்குள் நுழைந்த அடையாளந் தெரியாத துப்பாக்கிதா ரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment