கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் திருகோணமலை கந்தளாய் வெலிங்டன் வீதியில் இன்று காலை நடந்துள்ளது.
சம்பவத்தில் பௌசி தஸ்மியா என்ற 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே சாவடைந்துள்ளார்.
தனது வீட்டிலிருந்து ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லத் தயாரானபோது, கணவர் மனைவியை சரமாரியாகக் கத்தியால் குத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கழுத்திலும் வயிற்றிலும் கத்திக் குத்துக்கு இலக்கான மனைவி , ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரான கணவன் தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment