பயிர்களுக்கு சேதம் விளைவித்துவரும் படைப்புழு பற்றிய விழிப்புணரவு பேரணி ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி கரடி போக்கு சந்தியிலிருந்து டிப்போச் சந்தி வரை இப் பேரணி நடந்தது.
விவசாயத் திணைக்களத்தினர். கமநல சேவைகள் திணைக்களத்தினர் மற்றும் யாழ் பல்கலை கழகத்தின் விவசாய பீட மாணவர்கள் விவசாயிகள் ஆகியோர் பேரணியில் கலந்துகொண்டனர்.
சோளம், இறுங்கு, கரும்பு, நெல், மரக்கறிகள், பழங்கள், அவரைப் பயிர்கள், உட்பட நூற்றுக்கு மேற்ப்பட்ட பயிர்களை அழிக்க கூடிய பீடை இதுவாகும்.
இது தொடர்பான விழிப்புணர்வுகளை விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இப் பேரணி இடம்பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment