வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
68 வயதுடைய முதியவர் ஒருவரே வர்த்தக நிலையத்தினுள் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் அம்பலாந்தொட்டை, கந்தேகொட சந்தி பிரதேசத்தில் நடந்துள்ளது.
இனந்தெரியாத ஒருவர் வர்த்தக நிலையத்தின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்ததற்கான தடையங்கள் காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment