தமிழகத்தில் எவரும் அரசியல் செய்ய முடியாது- கமல்ஹாசன்!

டெல்லியைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் எவரும் அரசியல் செய்ய முடியாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று கட்சி அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும்? தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சியே முடிவுசெய்யும்.
தற்போது மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். டெல்லியை தவிர்த்துவிட்டு இங்கு எவரும் அரசியல் செய்ய முடியாது” எனக் கூறினார்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment