ஜனாதிபதிக்கு எதிரான மனநலக் கோளாறு வழக்கு தள்ளுபடி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவினை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு அரசுக்கு ஏற்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் சட்ட செலவினங்களைச் மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளர் தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நீதிப்பேராணை மனு கடந்த ஆண்டு டிசெம்பர் 10 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய செயற்பாடுகள் காரணமாக அவர் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவரை உளவியல் ரீதியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
குறிப்பாக ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்குப் பிறகு ஜனாதிபதியின் செயற்பாடுகளில் சந்தேகம் இருப்பதாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் குறிப்பிட்டனர்.
அத்துடன் இம் மனுவில் காவல்துறை மா அதிபருடன் கோட்டை தலைமையகப் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியும் எதிர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதிக்கு மனநிலைப் பாதிப்பு என்று கூறிய மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்செல் எனும் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment