யாழ்ப்பாண மாநகர முதல்வரின் அனைத்துவித செயற்பாடுகளுக்கும் எமது ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார். தென் ஆசியாவின் திணைக்கள தலைவரும் - இந்தியாவின் இணைப்பாளருமாகிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பேர்கஸ் அல்ட் ஒபே.
யாழ் மாநகர முதல்வருக்கும் - பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலரும், சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆலோசகர் பவுல் கிறீனும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
அண்மையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் அதன் பிற்பாடான நிலைமைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக மறுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்ட விதம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஆட்சி மாற்றத்தினால் யாழ் மாநகரில் தடைப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பிலும் பேசப்பட்டது.
இச் சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் திரு. ஜெயசீலன் அவர்கள், பிரதி ஆணையாளர் சீராளன் ஆகியோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment