வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி- பன்னங்கண்டி பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினர் இன்று துப்பரவு பணிகளை மேற்கொண் டுள்ளனர்.
பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட பொது இடங்கள் இதன்போது துப்பரவு செய்யப்பட்டன.
இதன்போது பாடசாலை கட்டடங்களுக்கு வர்ணம் பூசும் செயற்பாடுகளை இளைஞர்கள் முன்னெடுத்திருந்தனர். பிரதேச ரீதியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக குறித்த பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பிரதேச சபை உறுப்பினர்கள், கிளிநொச்சி- யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இளைஞர் யுவதிகள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை நாளைய தினம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜாபக்ஷ தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்கு வருகை தர உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment