எதிர்வரும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் ஒரு பரந்த கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கு எண்ணம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியும் இந்த கூட்டணியில் உள்ளடங்கியிருக்கும் என்று நேற்றையதினம் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் தனது புத்தாண்டு பணிகளை தனிப்பட்ட காரியாலயத்தில் ஆரம்பித்து வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார். இதன்போது பௌத்த மத குருமார்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளை நடத்திவைத்துள்ளனர்.
0 comments:
Post a Comment