நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான படம் ”கனா” அவரது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய இந்தப் படம், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சாதாரண ஏழைக் குடும்பத்துப் பெண் ஒருவர், மகளிர் கிர்க்கெட்டில் இணைந்து எப்படி தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறார்; அதில் அவர் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் என, விளையாட்டை மையமாக வைத்து ”கனா” படம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயத்தின் பெருமையையும் பேசிய படம்.
ஏற்கனவே விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹிந்தி படம் ”தங்கல்” சீனாவுக்குச் சென்று, பெரும் வெற்றி பெற்றது. 'அதனால், மகளிர் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ”கனா” படம் சீனாவுக்கு சென்றாலும், பெரும் வெற்றி பெறும், என சிவகார்த்திகேயனிடம் நடிகர் சத்யராஜ், பட ரீலீசின் போதே வலியுறுத்தினார்.
இந்தநிலையில், சீன மொழியில் ”கனா” படம் மொழி மாற்றம் செய்யப்பட்டால், அந்தப் படத்தை சீனாவில் வெளியிட விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கின்றனரா என்பது குறித்து, பலரிடமும் படக் குழு பேசியது. பாசிட்டிவ்வாக பதில் வர, தற்போது, அம்முயற்சியில் படக் குழு இறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment