வீதியில் சென்ற பாரவூர்தி குடைச்சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
திஸ்ஸமஹாராம - அக்கரபத்தனைக்கு கால்நடைக்கான உணவுகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியே நுவரெலியா, தலவாக்கலை பிரதான வீதியில் விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவரின் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment