அரவிந்த்சாமி நடித்து முடித்துள்ள சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசுரன் படங்கள் வெளிவரவுள்ளது.
இவைகள் பல பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் இருக்கிறது. தற்போது கள்ளபார்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்தப் படத்தை கொலையுதிர் காலம், மஹா, பாக்சர் படங்களை தயாரிக்கும் எக்ஸ்ட்ரா என்டர்டெயின்ட் மதியழகன் தயாரிக்கிறார்.
படம் குறித்து அவர் கூறியதாவது, இது ஒரு முழுமையான ஆக்சன் திரைப்படம். கதையில் நாயகன் அரவிந்த்சாமி இரண்டு லுக்கில் வருவதால் தனது உடல் எடையை கணிசமாக கூட்டியிருக்கிறார்.
மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. முதல் பார்வை மார்ச் முதல் வாரத்திலும், படப்பிடிப்பு மார்ச் இறுதியிலும் தொடங்கும்" என்றார்.
0 comments:
Post a Comment