புதிய அரசியல் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்பு க்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் சக்தி ஒன்றைக் கட்டியெழுப்புவோம்.
நாட்டைக் கட்டியெழுப்புவதே இந்த அரசியல் கூட்டணியின் நோக்கமாகும்” என தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றை இலக்கு வைத்து புதிய கூட்டணி ஒன்று அமைக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பிரிதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தி ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment