தற்போதைய நிலையில் உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் மின்னஞ்சல் சேவையாக ஜிமெயில் திகழ்கின்றது.
கூகுளினால் வழங்கப்பட்டு வரும் இச் சேவையானது இந்திய அளவில் நேற்யை தினம் சில மணி நேரம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
அதேபோன்று அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானிய உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளிலும் பகுதியாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
பயனர்கள் ஜிமெயில் முகவரியினை பயன்படுத்த முயன்றபோது '404 Error' காண்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சேவையை முற்றிலுமாக பயன்படுத்த முடியாது இருந்ததாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக கூகுள் நிறுவனமும் உறுதிப்படுத்தி தகவலை வெளியிட்டிருந்தது.
எனினும் கூகுளின் உறுதிமொழிக்கு அமைய தற்போது ஜிமெயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.
0 comments:
Post a Comment