நடிகர் வடிவேலுவுக்குப் பின், பெரிய காமெடி நடிகராக உருவாகி இருக்கிறார் யோகி பாபு.
”தர்ம பிரபு”', ”ஜோம்பி”,”கூர்கா” போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர், நடிக்கும் படங்களில் நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பிரபல நடிகைகளும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் 'வாட்ச்மேன்' என்ற புதிய படத்தில், யோகிபாபு, 'ராப்' நடனம் ஆடத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் பரவி இருக்கிறது. அந்தப் பாடலில் நடிகர் யோகிபாபுவுடன் நடிகை சாயிஷா இணைந்து நடனமாட இருக்கிறாராம்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பதோடு, இசையமைக்கவும் உள்ளார். வாட்ச்மேன் படத்தில், ராஜ் அர்ஜுன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில், யோகிபாபுவின் 'ராப்' பாடல், படத்தின் ஹைலைட்டாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment