இலங்கை விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தகவல் வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் பிராந்திய ரீதியான பயணிகள் விமான சேவைகளை நடத்தும் வகையில், பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது நாட்டின் சுற்றுலாத் துறைக்குப் பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும், விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்ப டமாட்டாது, எனினும், பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றவகையில் புனரமைப்புச் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறிய விமானங்களை மாத்திரமே இந்த விமான நிலையத்தின் மூலம் இயக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment