தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய மாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment