இந்திய அணி மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி இன்று நிறைவடைந்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி தனது முதல் இன்னிங்சில் விக்கட்டுக்களை இழந்து 622 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை இந்திய அணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இந்தி அணி சார்பாக புஜாரா 193 ஓட்டங்களையும், ரிஷாப் பான்ட் 159 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பின்னர், தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 300 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
பின்னர் பொலோ - ஒன் முறையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த அவுஸ்திரேலியா அணி நேற்றை நாள் நிறைவின் போது விக்கட் இழப்பின்றி 6 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில் ,போட்டியின் இறுதி நாளான இன்று காலை தொடக்கம் மைதானத்தில் கடும் மழை பெய்து வந்ததால், நடுவர்கள் போட்டியை வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு கொண்டு வர தீர்மானித்தனர்.
அதன்படி, நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிக்கொண்டுள்ளது.
கடந்த 1947ஆம் ஆண்டு தொடக்கம் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் முதல் வெற்றி இதுவென்பது சிறப்பம்சமாகும். இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற சிறப்பையும் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது. போட்டியின் மற்றும் தொடராட்ட நாயகன் விருதை புஜாரா பெற்றுக்கொண்டார்.
0 comments:
Post a Comment