இலங்கை இராணுவ வீரர்களின் உயிரிழப்பிற்கு வழிவகுத்த மாலி தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மாலியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் இலங்கை அரசாங்கத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன் தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்
அத்துடன் இவ்வாறான தாக்குதலகள்; நாட்டின் சமாதானத்திற்கான உறுதிப்பாட்டை தடுக்காது என்றும் மேலும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களாக கருதப்படும் என்றும்; எச்சரித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment