வடசென்னை' படத்திற்குப் பிறகு வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி மீண்டும இணையும் படம் 'அசுரன்'. இதில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்த மஞ்சு, திலீப்பை காதல் திருமண செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர். தற்போது, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வருகிறார்.
இதுவரை மலையாளப் படங்களில் மட்டுமே நடித்து வந்த மஞ்சு, முதல் முறையாக தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். படத்தில் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. ஆனால், சற்று முன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
அதில் தனுஷுக்குப் பக்கத்தில் மஞ்சு வாரியர் நிற்பது போன்ற அந்தக் காலப் புகைப்படங்கள் போல கருப்பு, வெள்ளையில் டிசைன் செய்து வெளியிட்டுள்ளார்கள். 'அசுரன்' படத்தில் தனுஷின் தோற்றம், மஞ்சுவின் தோற்றம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது இது ஒரு 'பீரியட்' படமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
தனுஷை விட மஞ்சு வாரியர் ஐந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சினிமாவில் நமது நடிகர்கள் அவர்களை விட வயது குறைந்த நாயகிகளுடன்தான் ஜோடி சேருவார்கள். தனுஷ் வித்தியாசமாக வயதில் மூத்தவருடன் ஜோடி சேர்கிறார். 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது.
0 comments:
Post a Comment