சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
“பாஜகவில் சேருமாறு நடிகர் அஜித்குமாரை அழைக்கவில்லை. இளைஞர்கள் எல்லோரும் அரசியலில் ஈடுபடுவது தவறல்ல. பாராட்டுக்குரிய அறிக்கையை நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ளார்.
குழந்தைக்கு அஜித்குமார் உதவி செய்ததையே பாராட்டினேன். நான் மருத்துவராக இருந்த போது ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அஜித்குமார் உதவி செய்தார். பிற நடிகர்களைப்போல் அல்லாமல் நடிகர் அஜித்குமார் தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளார்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment