ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி!

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவ்மி ஒசாகா மற்றும் லாத்வியா வீராங்கனை சுலெஸ்டானா ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் இத் தொடரில் இன்று காலை இடம்பெற்ற நான்காவது சுற்று ஆட்டமொன்றில் நவ்மி ஒசாகா மற்றும் சுலெஸ்டானா  ஆகியோர் மோதினார்கள். 
இதில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சுவஸ்டோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறி இருக்கின்றார்.
இந் நிலையில் ஒசாகா கால் இறுதியில் 6 ஆவது வரிசையில் இருக்கும். உக்ரைன் வீராங்கனை எலீனா சுவிட்டோலினாவை சந்திக்கிறார். அவர் 4 ஆவது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கெய்சை 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
சுவிட்டோலினா தொடர்ந்து  இரண்டாவது முறையாக இச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.
மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் உலகின் 2 ஆம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த தாமஸ் பெட்ரிக்கை 6-0, 6-1, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.
இதேவேளை பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இடம்பெற்ற போட்டியொன்றில் ரஷ்யா வீராங்கனை மரியா ஷரபோவாவை அவுஸ்திரேலிய வீராங்கனை அஷ்லெய்க் பேர்ட்டி வீழ்த்தி காலிறுதிக்கு நுழைந்துள்ளார்.
காலிறுதியில் அவர் 8 ஆம் நிலை வீராங்கனையான கிவிட்டோவை எதிர்கொள்கிறார். 
மேலும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் நான்காவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பிய வீரர் ஜோகோவிசை ரஷ்ய வீரர் மெட்வதேவ் எதிர்கொள்கிறார்.
ஏனைய ஆட்டங்களில் ஆட்டங்களில் நிஷிகோரி (ஜப்பான்)- பஸ்டா (ஸ்பெயின்), கோரிக் (குரோஷியா)- லுகாஸ் பவுலி (பிரான்ஸ்) மோதுகிறார்கள். 
மேலும் நடைபெற்று முடிந்த  4 ஆவது சுற்றுப் போட்டியொன்றில் கிரீஸ் வீரர் டிஸ்டிஸ்பசிடம் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment