மலேசியாவின் 5ஆம் முடிக்குரிய மன்னர் சுல்தான் மொஹமட் பதவி துறந்துள்ளார். பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற கடந்த 60 ஆண்டுகளில் எந்தவொரு மலேசிய மன்னரும் பதவி துறக்கவில்லை.
இந்த நிலையில், மன்னர் சுல்தான் மொஹமட்டின் பதவி துறப்பு வரலாற்றில் முதன்முறை இடம்பெற்றுள்ளது. எனினும், இந்தப் பதவி துறப்பு குறித்து மலேசிய தேசிய அரண்மனை எவ்வித காரணங்களையும் வெளியிடாதபோதும், குறித்த தீர்மானம் உடனடியாக அமுலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
மன்னர் சுல்தான், ரஷ்ய பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியிடப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
0 comments:
Post a Comment