பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மீரிகம - திவுலுபிட்டிய வீதியின் 20 ஆவது கட்டைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரை மீரிகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் அதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீரிகம பகுதியை சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவரே சாவடைந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment