மஹாரகமை - அபேக்ஷா வைத்தியசாலையின் அத்திய அவசிய மருத்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை காரணமாக புற்றுநோயாளர்கள் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
அந்த மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் புத்திக குருகுலசூரிய இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த மருத்துவமனைக்கு, அரச மருத்துவ கூட்டுத்தாபனத்தினால் மற்றும் அரச மருத்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த மருத்துவமனைக்கு மருத்து பொருட்களை வழங்கும் செயன்முறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment