அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் நாளை உலகம் முழுக்க ரிலீஸாகிறது. இப்படத்துடன் ரஜினியின் பேட்ட படமும் ரிலீஸாகிறது.
இப்படத்தின் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளின் உரிமையை விநியோகஸ்தர் சாய்பாபா பெற்றிருந்தார். இவர் பைனான்சியர் உமாபதிக்கு ரூ.78 லட்சம் கடன் தர வேண்டி உள்ளது. இதை திருப்பி தராததால் விஸ்வாசம் படத்தை திரையிட அனுமதி கூடாது என உமாபதி தொடர்ந்த வழக்கில், இந்த மூன்று பகுதிகளிலும் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதை நீக்க கோரி சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது, ரூ.35 லட்சம் ரூபாயை இன்றே வழங்குவதாகவும், மீதம் உள்ள தொகையை 4 வாரத்திற்குள் வழங்க உத்தரவாதம் அளிப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் வழக்கை எடுத்து கொள்வதாக நீதிபதி சுந்தர் அறிவித்தார்.
தடை நீக்கம்
இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, ரூ.35 லட்சம் தொகைக்கு விநியோகஸ்தர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து நான்கு வாரங்களுக்கு பணத்தை செலுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து, விஸ்வாசம் படத்திற்கு 3 மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிபதி நீக்கினார்.
கோர்ட்டின் உத்தரவையடுத்து விஸ்வாசம் எந்த சிக்கலும் இல்லாமல் அனைத்து ஏரியாக்களிலும் நாளை(ஜன.,10) வெளியாகிறது.
0 comments:
Post a Comment