கஜன் காண்டீபன் என்பவர் தயாரித்து நடித்துள்ள புதிய த்ரில் படம் ”ஓவியா” இந்தப் படத்தை கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கி இருக்கிறார்.
வேலையில் மட்டும் கவனம் செலுத்தும் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம் கொஞ்சமும் அன்பு செலுத்துவதில்லை. அவர்களது வாழ்க்கை மீது அக்கறை செலுத்துவதில்லை.
பெற்றோர் பராமரிப்பின்றி வளரும் அந்த குழந்தைகள், தவறான பாதைகளில் அதிக அளவில் செல்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த நிலை, நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
அப்படி வளர்ந்த ஒரு குழந்தையை கண்டிக்கப் போய், குழந்தை, பெற்றோரை மூர்க்கத்தனமாக எதிர்க்கிறது. பெற்றோர், ஆத்திரத்தில் அந்த குழந்தையை கொன்று விடுகின்றனர்.
அந்தக் குழந்தை ஆவியாக வந்து தன்னை கொன்ற பெற்றோரை பழிவாங்குகிறது. இப்படியொரு கதைப் பின்னல்தான், ஓவியாவின் மொத்த கதை.
இப்படிப்பட்ட கதையம்சம் கொண்ட ”ஓவியா” படத்தில் இலங்கை நடிகை மிதுனா நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டு, ”ஓவியா” படம் குறித்து, புகழ்ந்துள்ளார் நடிகர் இயக்குநர் கே.பாக்கிரராஜ்.
0 comments:
Post a Comment