கொழும்பில் பாடசாலை மாணவி ஒருவர் ஆயுத முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வக - இரிதாபொல நகரத்தில் பகுதி நேர வகுப்பிற்காக வீட்டில் இருந்து சென்ற மாணவி ஒருவர், துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்தப்பட்டுள்ளார்.
எனினும் கடத்துவதற்கு இலக்கு வைக்கப்பட்ட மாணவி அவர் அல்ல என தெரியவந்தவுடன் இடை நடுவில் விட்டுச் சென்றுள்ளனர்.
ஹேனயாய பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவரே கடத்துவதற்கு இலக்கு வைக்கப்பட்டிருந்தார் என குறிப்பிடப்படுகின்றது.
அந்த மாணவி கடத்தல்காரர்களின் இலக்கு அல்ல என்ற போதிலும், வேறு ஒரு மாணவியை கடத்தவே இந்த கும்பல் முயற்சித்துள்ளது.
கடத்தல் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment