அதிகாிக்கும் மனித கடத்தல் - ஐ நா அறிக்கை தகவல்

தேவைகளுக்காக மனிதர்களைக் கடத்தும் செயல் உலகம்  அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சபையின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான 2018 ஆம் ஆண்டிற்கான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
அதில், ”மனிதக் கடத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் அவர்களது பொருளாதாரத் தேவைகளுக்காக பெண்களையும், குழந்தைகளையும் கடத்துகின்றனர். மேலும் உடல் உறுப்புகளைத் திருடுவதற்காக கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடத்தப்படுபவர்களில் இதில் 70 சதவீத பேர் பெண்கள்.
கடத்தப்பட்டவர்கள் பின் பாலியல் துன்புறுத்தல், வேலை, பிச்சை எடுப்பதற்காக வற்புறுத்தப்படுகின்றன.
2003 முதல் 2016 வரை கிட்டதட்ட 2 லட்சத்துக்கு அதிகமான ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்படுள்ளன.
கடத்தல் சம்பவங்களுக்கு எதிராகப் போதிய நடவடிக்கைகள் எடுக்காத நாடுகளில் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. கடந்த 7 ஆண்டுகளில் கடத்தல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் 2016-ம் ஆண்டில் கடத்த 13 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கத்தில் மனித உரிமை மீறல் தடுப்புச் சட்டம் பாகிஸ்தானில் 2018-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் கடத்தல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment