முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கில் இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தா பனத்தின் தலைவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 17 ஆம் திகதி அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை சம்பத் அபேகோன் தலைமையில் சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகள் கேட்டுள்ள ஆவணங்கள் சிலவற்றை கண்டெடுக்க முடியாதுள்ளதாக இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தா பனத்தின் சட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த ஆவணங்கள் வழங்குவது தொடர்பில் தீர்க்கமான முடிவைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவி டப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாக வில்லை என்பதோடு, அவர் வெளிநாடு சென்றுள்ளதாக அவரின் சட்டத்தரணிகள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment