நிதியமச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட 2019ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு-செலவு திட்ட முன்மொழிவுகளும் அதே தினத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சட்டமூலத்திற்கமைய இவ்வாண்டுக்கான அரச செலவீனம் 4 ஆயிரத்து 470 பில்லியன் ரூபாயாகவும், வரவு-செலவு திட்ட பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 வீதமாகவும் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.5 வீதமாக பதிவுசெய்யப்பட்டிருந்த தற்போதைய அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் படிப்படியாக அதிகரித்திருந்தது.
இந்நிலையில், இவ்வருட இறுதிக்குள் அரச வருமானத்தை 17 வீதமாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment