ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 5 கிலோகிராம் மான் இறைச்சியுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் தென்பகுதி கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடற்படை கட்டளை தலைமையகமும், வன விலங்கு பாதுகாப்பு திணைக்களமும் இணைந்து நடத்திய சோதனைகளின் பின்னர் இவ்வாறு மான் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மான் இறைச்சியுடன் ஹோட்டல் உரிமையாளர் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வனவிலங்கு திணைக்களத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment