யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்தநாள் நினைவுதினம் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வு பாசையூர் எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில், பாசையூர் கடற்கரை முன்றலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திரு உருவச்சிலைக்கு அருகே இடம்பெற்றுள்ளது.
இதன்போது, எம்.ஜி.ஆரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் பிரதம விருந்தினராகவும் யாழ்ப்பாணம் மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள்
அத்தோடு பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொருட்கள், ஆடைகள் மற்றும் துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பாசையூர் எம்.ஜி.ஆர். மன்றத்தின் உறுப்பினர்கள், உதவித்திட்டப் பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment