வைத்தியர்களின் கார்களின் கண்ணாடி விசமிகளால் உடைப்பு!
வவுனியாவில் வைத்தியர் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களினுடைய கண்ணாடி இன்று காலை அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிபுரியும் மூன்று வைத்தியர்களின் கார்களின் கண்ணாடிகளே இவ்வாறு இனந்தெரியாத நபர்களினால் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் பாதுகாப்பு கெமராக்களை ஆய்வுசெய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment