நடமாடும் உணவுப் பொருள்கள் செய்யும் வாகனத்தில் தனிநபர் சுகாதாரம் பேணாத நிலையில் வாகன உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வரணிப் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் சாவகச்சேரி நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அப் பகுதிகளில் ஐஸ்கிறீம் வகைகள் மற்றும் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வரணி வடக்கு பாடசாலையொன்றில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.
அங்கு ஐஸ்கிறீம் வகைகள் விற்பனைக்கு கொண்டு வந்த நடமாடும் வாகனத்தில் அவற்றை விற்பனை செய்துகொண்டிருந்துள்ளார்.
ஈடுபட்ட நபர் தொப்பி, மேலங்கி, மருத்துவச் சான்றிதழ் போன்றவை இன்றி அதி உயர் தனிநபர் சுகாதாரம் பேணாத நிலையில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டமை அங்கு பரிசோதனை மேற்கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் கண்டுபிடிக்கப்பட்டது.
பருத்தித்துறையைச் சேர்ந்த நடமாடும் ஐஸ்கிறீம் வாகன உரிமையாளருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது வாகன உரிமையாளர் நீதிமன்றுக்கு வருகை தராததால், நெல்லியடி பொலிஸார் மூலம் அழைப்பாணை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment