குருணாகலை - வெல்லவ தொடருந்து கடவையில் கெப் ரக வாகனமொன்று தொடருந்தில் மோதியதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை ஹிரிபிடியில் இருந்து குருணாகலை நோக்கி பயணித்த வாகனமே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த ஐவரும் குருணாகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இராணுவ மேஜர் ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெறும் போது தொடருந்துக் கடவையின் சமிக்ஞை வழங்கப்படவில்லை எனவும் , கெப் வாகனத்தின் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment