அப்பா சந்திரசேகரின் உதவியால் சினிமாவுக்கு வந்தாலும், இன்று தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் விஜய். வசூல் மன்னான ரஜினிக்கு அடுத்த இடத்தில் இவர்தான். அந்தளவுக்கு சினிமாவில் இவரது வளர்ச்சி அபாரமாக உள்ளது.
இந்த நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கடந்த இருதினங்களாக கோலிவுட்டின், "டாக் ஆப் தி மவுத்"தாக உள்ளார். திடீரென "ஜங்கசன்" என்கிற குறும்படத்தை இயக்கி, நடித்திருந்தார்.
இந்த குறும்படத்தில் சஞ்சய்யின் நடிப்பு, விஜய்யை போன்று அலட்டாமல் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
விஜய்யை போன்றே சஞ்சய்யும் சினிமாவில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. இப்போது, வி.ஜே.வாக மாறி, இயக்குநர் ஆனந்த் சங்கரை பேட்டி எடுத்திருக்கிறார்.
இந்த பேட்டியினூடாகப் பல விஷயங்களை தான் கற்றுக் கொண்டதாக அவர் கூறியிருக்கிறார். தற்போது சஞ்சய்யின் ஆர்ஜே வீடியோ வைரலாகி வருகிறது.
0 comments:
Post a Comment