நுரைச்சோலை மின்னுற்பத்தியில் சூழல் பிரச்சினை ஆராய்வு!


நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் சூழல் ரீதியான எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும், அதனை எதிர்காலத்திலும் திறன்பட கோளாறுகள் இன்றி செயற்படுத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பில் செயற்படவுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.



அவர் தனது அதிகாரிகளுடன் நேற்றைய தினம் மின்னுற்பத்தி நிலையத்தில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது இது முக்கியமான மின்னுற்பத்தி நிலையம் என்றும் நாட்டின் தேவைக்கு ஏற்றவாறு அதிகளவான அலகுகள் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது என்றும் தான் பதவியேற்றதுடன் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் தற்போதைய நிலைமையை ஆராய வேண்டும் என்று தீர்மானத்துடன் இருந்ததாகவும் கூறியுள்ளார்.



மின்சார சபையின் செயற்றிறன் அடிப்படையில் இங்கிருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு தெரிந்தவகையில் எந்தவொரு பிரச்சினையும் இங்கு இல்லை என்று மேலும் கூறியுள்ளர்.



தமது இந்த எதிர்பார்ப்பை மக்களுக்காக எவ்வாறு சிறப்பாக நிறைவேற்றுவது என்பது பற்றியும், சாதாரண மின்சார நுகர்வோருக்கு சுமை ஏற்படாதவாறும், மின்சார தடைகள் நிகழாதவாறும் தொடர்ச்சியான சேவையை வழங்குவதற்கும் தாம் அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் செயற்படவுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.



Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment