கிளிநொச்சியில் அழகு தாவரங்கள் கண்காட்சியொன்று இன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
கிளிநொச்சி பொதுச்சந்தை வளாகத்தில் சுவஹஸ் அழகுத்தாவர உற்பத்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி, எதிர்வரும் திங்கட்கிழமை வரை நடைபெற உள்ளது.
குறித்த கண்காட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அழகு தாவர உற்பத்திகள், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கிளிநாச்சி மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகின்றது.
இந்நிலையில் கிளிநாச்சி மாவட்டத்தில் இவ்வாறு அழகு தாவரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பெரும் உறுதுணை யாக அமையுமென நம்பப்படுகின்றது.
0 comments:
Post a Comment