கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 13 ஆம் திகதி குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கிளிநாச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு மீனவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றது. விசாரணை மேற்கொண்ட நீதிபதி, பதினொரு பேரையும் இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட கூடாது எனவும், அவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் 2 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்து மீனவர்களை விடுவித்தார்.
விசைபடகின் உரிமையாளர் எதிர்வரும் மார்ச் மாதம் படகின் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். தவறும் பட்ச்சத்தில் விசைப்படகு அரசுடமையாக்கப்படும் என்றும் நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment