திருகோணமலை - உவர்மலை பகுதியில் வலம்புரி சங்குடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வலம்புரி சங்கினை விற்பனைக்காக முயற்சித்த வேளை நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை - பாலையூற்று பகுதியைச் சேர்ந்த வசுதீன் முகம்மட் பாரிஸ் 34 வயது, கிரிஸ்தவராஜா அனோஐன் 27 வயது மற்றும் அருமுகதாஸ் லுஜீவன் 23 வயது எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சந்ரசிறி மற்றும் எச். எம். எஸ். ஆர். கே. ஹேரத் ஆகியோருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளதாகவும்,மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment