கிதுல்கல - ஆற்றங்கரையோர பகுதியில் நீராடச்சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் கிதுல்கல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தின் போது 22 வயதுடைய லேல்கொட பகுதியை சேர்ந்த ருவன் சாமர எனப்படுபவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் தாலிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், மேலதிக விசாரணைகளை கிதுல்கல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment