கிளைமோர் தாக்குதல் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவேந்தல்

இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களுக்கு உறவினர்களால் மன்னாரில்   நினைவேந்தல் செய்யப்பட்டது.

இந்தத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் அதிபர் பாடசாலை பணியாளர்கள் வாகனச் சாரதி உட்பட சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களின் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு விடத்தல் தீவில் இருந்து மடுக்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

தாக்குதல் சம்பவம் மடுவுக்கும் தட்சனா மருதமடுவுக்கும் இடையில் நடத்தப்பட்டது.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment