சீமெந்து கல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர்!


முல்லைத்தீவு, முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் ஆக்கிரமித்து முகாமமைத்து படைத்தலைமையகத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த  ராணுவத்தினர் வீடு கட்டுவதற்குப் பயன்படும் சீமெந்து கற்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த இராணுவ முகாமிற்கு வெளியே காணப்படும் விளம்பரப்பலகையில் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், தொலைபெசி வாயிலாக தொடர்புகொண்டு ஓடர்செய்து கற்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வன்னி பெருநிலப்பரப்பில் மக்கள் செய்துவரும் பல்வேறு தொழில்களையும் இராணுவத்தினர் செய்துவருகின்றனர். விவசாயம், பால் பதனிடும் நிலையம், மீன்பிடி, சிறு ணவகம், பெரியளவிலான ஹோட்டல் ஆகிய தொழிற்துறைகளை இராணுவம் ஏற்கனவே நடத்தி வருகின்றது. 

இந்நிலையில் மக்களின் குடிசைக் கைத்தொழிலாக இருந்து வரும் கற்கள் செய்து விற்பனை செய்யும் தொழிலையும் இராணுவம் கையிலெடுத்திருக்கின்றமையானது மக்களின் எஞ்சியிருக்கின்ற தொழில் முயற்சிகளையும் அபகரிக்கும் நோக்கம் கொண்டது எனவும், இது தொழில்சார்ந்த என மக்கள் தெரிவித்துள்ளனர்.  


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment