காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில் இருக்கிறது. ”ஜோம்பி, தர்மபிரபு, கூர்க்கா, என வரிசையாக பல படங்களில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
அடுத்தடுத்தும், படங்கள் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கின்றன. ”ஜோம்பி” படத்தில் நடிகை யாஷிகாவுடன், யோகிபாபு இணைந்து நடிக்க, படத்தை புவன் இயக்குகிறார்.
படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். படத்தின் படபிடிப்பு விறுவிறுவென நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், ”ஜோம்பி” படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.
இப்படி வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட நடிகர் விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டிருக்கிறார். யோகிபாபுவுக்காக, அவர் இப்படி செய்ய ஒப்புக் கொண்டிருப்பதால், படக் குழு நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி சொல்லியிருப்பதாகத் தகவல்.
0 comments:
Post a Comment