டெல்லியில் வசித்து வந்த தமிழ் நடிகையிடம் கொள்ளையர்கள் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
கமல்ஹாசன் நடித்த கலைஞன் என்ற படத்தில் நடித்தவர் சென்னையை சேர்ந்த நடிகை பர்ஹீன். அதன்பின்னர், இந்தி, மலையானம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகரை காதலித்து திருமணம் செய்துகொண்டு டெல்லியில் வசித்து வந்தார்.
பர்ஹீன், தனது காரில் நேற்று நண்பகல் மால் ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் காரை பின் தொடர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல், காரில் இருந்த பர்ஸ், மொபைல்போன்கள், சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளது.
பர்ஸில் ரூ.16 ஆயிரம் இருந்தது. ஆனால், அவர்களை தப்ப விடாமல், பர்ஹீன் மறித்து நின்றுகொண்டு, உதவிக்கு ஆட்களை அழைத்தார். உடனடியாக சுதாரித்த கும்பல், பர்ஹீனை சரமாரியாகத் தாக்கிவிட்டு சாலையின் மறுபுறத்துக்குத் தப்பியோடியது.
இதில் காயமடைந்த அவர், ரோட்டில் மயங்கி விழுந்தார். வழக்குப் பதிவு செய்த பொலிசார், சிசிடிவி கமெரா உதவியோடு, தப்பியோடிய கும்பலை தேடிவருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ’தக் தக்’ கும்பலைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிக்னலில் நிற்கும் கார் டிரைவர்களின் கவனத்தை திசைத் திருப் பி கொள்ளையடிப்பவர்கள்.
0 comments:
Post a Comment