நேற்று இடம்பெற்ற இப் போட்டியில் நேபாளம் அணி 145 ஓட்டங்களினால் அபார வெற்றயீட்டியது.
இந்த போட்டியில் நேபாள நாட்டை சேர்ந்த 16 வருடம் 146 நாட்கள் வயது கொண்ட இளம் கிரிக்கெட் வீரரான ரோஹித் பாவ்டெல் 58 பந்துகளில் 55 ஓட்டங்களை எடுத்து உள்ளார்.
இதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மிக குறைந்த வயதில் அரை சதம் அடித்து சாதனை புரிந்த பெருமையை இவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் அரை சதம் (59 ரன்கள்) கடந்தபொழுது அவரது வயது 16 வருடம் 213 நாட்கள் ஆகும்.
இதனால் தற்போது பாவ்டெல் குறைந்த வயதில் அரைசதம் விளாசி சச்சினை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
0 comments:
Post a Comment