கடந்த ஆண்டு, தெலுங்கில் தொடர்ச்சியாக இரு வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் நடிகை தமன்னா, ”கே.ஜி.எப்.”முதல் பாகத்தில் நடித்து, கடந்த ஆண்டை முடித்திருந்தார்.
இந்த நிலையில், அவரது அடுத்த படமாக ரிலீசாக இருப்பது ”கண்ணே கலைமானே” படத்தில் வங்கி அதிகாரியாக, புது வேடத்தில் நடித்திருக்கும் தமன்னாவுக்கு, ஜோடியாக நடிப்பவர் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், உதயநிதியும், தமன்னாவும் இணைந்து படத்துக்கான புரமோஷன் வேலைகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
சமீபத்தில், ரசிகர்களை சந்தித்த தமன்னாவிடம், அடுத்த படமான ”கண்ணே கலைமானே” ரிலீஸ் தேதி என்ன? என்பது குறித்து கேட்க, அதற்கு பதில் அளித்த அவர், வரும் பெப்ரவரியில்.,1 இல், ”கண்ணே கலைமானே” படம் ரிலீஸ் ஆகிறது என்றார். அடுத்த கேள்வியாக, படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும்? என்று கேட்க, அதற்கும் பதிலளித்தார் தமன்னா. படத்தின் டிரைலர் வரும் 9 இல் ரிலீஸ் ஆகும் என தெரிவித்தார்.
0 comments:
Post a Comment